×

கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஒருவருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக சென்னை வனத்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை வன பாதுகாவலர் ஞானசேகர் தலைமையிலான 10 பேர் கொண்ட வனத்துறையினர் கடந்த 10 நாட்களாக தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள கிடங்கில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் முரளி என்பவருக்கு சொந்தமான கிடங்கில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருவது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை வன பாதுகாவர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து சோதனை செய்ததில் அங்கு ஒரு கோடி மதிப்பிலான 10 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் செங்குன்றத்தை சேர்ந்த கதிரவன் என்பவர் வாடகைக்கு எடுத்திருப்பதும் ஏற்கனவே கதிரவன் மீது செம்மரக்கடத்தல் வழக்கு நிலுவையில் இரு்பபதும் தெரியவந்தது. சென்னை வனத்துறையினர் செம்மர கட்டைகளை பறிமுதல் செய்து திருவள்ளூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து செம்மரக்கடத்தல் மன்னன் கதிரவனை தேடி வருகின்றனர்.

Tags : warehouse , Seizure of 10 tons of timber stored in warehouse: web for one
× RELATED கூட்டுறவு விற்பனை அங்காடி விற்பனையாளர் சஸ்பெண்ட்..!!